புதிய சப் கலெக்டர் பதவி ஏற்பு!
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலாளராக இருந்த கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி சப் கலெக்டராக இன்று பொறுப்பேற்றார்.;
Update: 2023-12-19 05:58 GMT
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலாளராக இருந்த கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி சப் கலெக்டராக இன்று பொறுப்பேற்றார்.
பொள்ளாச்சி சார் ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியங்கா திருவாரூருக்கு மாற்றப்பட்டார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் பொறுப்பு சார் ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலாளராக இருந்த கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று திருவாரூரில் பயிற்சி துணை ஆட்சியராக பணியாற்றினார்.புதிதாக பதவியேற்றுள்ள சார் ஆட்சியருக்கு அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.