தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்களில் 'பார்க்கிங்' இல்லாததால் விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்களில் 'பார்க்கிங்' இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 13:03 GMT
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடக்கிறது. இதில், மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை 23 கி.மீ., துாரத்திற்கு 426 கோடி ரூபாய் மதிப்பில், ஆறுவழிச் சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் வரை, ஏராளமான உணவகங்கள் உள்ளன.
இவற்றில், வாகனங்கள் நிறுத்தும் வசதி இல்லை. இதனால், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையோரம் மற்றும் அதன் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். சாலை குறுகளாகி நெரிசல், விபத்து ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தும் வசதி இல்லாமல் உணவகம் நடத்துவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.