தமிழ் வழியில் கலக்கிய மாணவிக்கு குவியும் பாராட்டு
தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி சரஸ்வதி நீட் தேர்வில் 720க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;
Update: 2024-06-07 08:58 GMT
தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி சரஸ்வதி நீட் தேர்வில் 720க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாநகர குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகள் சரஸ்வதி 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்றார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவி சரஸ்வதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.