மயிலாடுதுறையில் சிறுத்தை பற்றிய வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வாந்தி பருப்பு மீது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-08 13:18 GMT
மாவட்ட எஸ்பி அலுவலகம்
சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுத்தையை பற்றி பொய்யான வதந்திகளை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று தனது மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.