பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை

தென்காசி மாவட்ட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 10:51 GMT

தென்காசி மாவட்ட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் தொடங்கிய இவ்வேளையில், பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது .கோடை வெயில் காலத்தில் எவ்வித வகுப்புகளும் நடத்தக் கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சிபிஎஸ்இ பள்ளிகளில், மத்திய பாடத்திட்டத்தின் கீழ் வருகிறோம் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து பள்ளிகளை செயல்படுத்தி வருகின்றனா். தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறாத அனைத்து பள்ளிகளும் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மற்றும் தனியாா் பள்ளிகளின் இயக்குநா் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. தொடா்ந்து வகுப்புகள் நடத்தப்படுவது அலுவலரின் திடீா் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் பள்ளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும், அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழ்நாடு தனியாா் பள்ளிகளின் இயக்குநருக்கும் பரிந்துரைக்கப்படும். வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் அப்பள்ளி தாளாளா், முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோரே பொறுப்பாவா் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News