டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை - டாஸ்மாக் ஊழியர் சங்கம் கோரிக்கை

டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநில ஆலோசகர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

Update: 2024-05-31 03:22 GMT

மாநில ஆலோசகர் ஜேம்ஸ்

கரூர் டாஸ்மாக் மொத்த வணிக குடோன் முன்பு, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அன்னம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் மாநில ஆலோசகர் ஜேம்ஸ், செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்வது, போன்ற தொழிலாளர் விரோத போக்கினை கடைப்பிடித்து வருகின்றார். 60க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்களை வேண்டிய கடைக்கு போடுவதன் மூலம் லஞ்சம் பெறுவதாகவும், இது மேலாளருக்கு தெரியாமல் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். நாங்கள் அடுத்த கட்டமாக லஞ்ச ஒழிப்பு துறையிலும், தலைமைச் செயலகத்துக்கும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். நடவடிக்கை இல்லை என்றால் மாநில அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News