மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை - ராணி ஸ்ரீகுமாா் எம்பி

தென்காசி தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என தோ்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் டாக்டா் ராணிஸ்ரீகுமாா் தெரிவித்தாா்.

Update: 2024-06-05 02:15 GMT
கட்சியினருடன் டாக்டா் ராணிஸ்ரீகுமாா்
தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக தலைவரின் திராவிட மாடல் ஆட்சியும், பெண்கள்-மாணவா்களுக்கு முதல்வா் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களும்தான் இந்த வெற்றிக்கு காரணம். என்னுடைய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த முதல்வா், அமைச்சா் உதயநிதி, திமுக துணைப் பொதுசெயலா் கனிமொழி எம்பி, தென்காசி பொறுப்பு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், திமுக மாவட்டச் செயலா்களுக்கும், கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும், வாக்களித்த மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தென்காசி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள்,பிரச்னைகள்,கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாா் அவா். பேட்டியின்போது, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை ஆகியோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News