பாலக்கோடு அருகே இளைஞருக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பாலக்கோடு அருகே முங்கப்பட்டி பகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக டிராக்டரை ஊர் பொதுமக்களுக்கு வழங்கினார்.;

Update: 2024-05-11 14:16 GMT

உணவு பரிமாறிய லாரன்ஸ்

திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் பவுண்டேஷன் என்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கும் சேவையை செய்து வருகிறார். அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பிரபாகரன் என்ற இளைஞருக்கு நடிகர் லாரன்ஸ் டிராக்டர் வழங்குவதற்காக வந்திருந்தார்.

அவருக்கு கிராம மக்கள் மேல் தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் அவரவர் குழந்தைகளை நடிகர் லாரன்ஸ் கையில் கொடுத்து தங்களது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து விவசாயி பிரபாகரனிடம் டிராக்டர் சாவியை கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த டிராக்டரையாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இதை தரவில்லை.

Advertisement

இரவு பகல் பாராமல் உழைத்து அந்த பணத்தில் இதை நான் செய்கிறேன். இந்த டிராக்டரை உங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஊர் மக்கள் யாரெல்லாம் விவசாயம் செய்ய கேட்கிறார்களோ அவர்களுக்கும் இலவசமாக கொடுங்கள் என விவசாயி பிரபாகரன் அவர்களிடம் அறிவுறுத்தினார்.மேலும் பேசிக்கொண்டே இருந்தால் போதாது ஒவ்வொரு ஊருக்கும் செல்ல வேண்டும் ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் பசியை தீர்க்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.இதனைத் தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பாசமாக சாப்பாடு பரிமாறினர். பின்பு கிராம மக்கள் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

Tags:    

Similar News