நடிகர் ரஜினி பிறந்தநாள்: தங்கதேர் இழுத்த ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், தங்கத்தேர் இழுத்தும் அவரது ரசிகர்கள் வழிபட்டனர்.;
Update: 2023-12-12 10:32 GMT
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், தங்கத்தேர் இழுத்தும் அவரது ரசிகர்கள் வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 74ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், நாகேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.