அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம்
நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா சு. தமிழ்மணியை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா சு. தமிழ்மணியை ஆதரித்து இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பட்டணம், வடுகம், சிங்களாந்தபுரம் , பிள்ளாநல்லூர், சந்திரசேகரபுரம், ஆண்டகலூர் கேட் ஆகிய பகுதிகளில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, மற்றும் இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் திறந்த வாகனத்தில் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்தார்கள். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ. சரோஜா, ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன், மற்றும் பேரூர் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம்,வடுகம் பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு விஷ்வா, உட்பட கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.. அப்போது பேசிய நட்சத்திர பேச்சாளர் சிங்கமுத்து தெரிந்தோ தெரியாமலோ கடந்த தேர்தலில் நாம் ஏமார்ந்து விட்டோம். பொய்யான வாக்குறுதிகளை நம்பி நாம் நம்முடைய நாக்கில் தேனை தடவி ஏமாற்றி விட்டார்கள். அதைத் தருகிறேன் இதைத் தருகிறேன் என்று கூறினார்கள். நம்ம தலையை மொட்டை அடித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இன்று 520 வாக்குறுதிகள் அள்ளி விசியுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை என்றெல்லாம் கூறினார் மாதம் ஆயிரம் ரூபாய் பாதி பேருக்கு தரவில்லை.
கேட்டால் தகுதியான பெண்களுக்கு மட்டும் தான். என்ன தகுதி வேண்டும் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் அன்பானவர்கள், பன்பானவர்கள் பகுத்தறிவானவர்கள் தானே எல்லோருமே அறிவாளிகள் தான். அது என்ன ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி இருக்கிறது மற்றொருவருக்கு தகுதி இல்லை என்று கூறுவதற்கு நீ யார். நீங்கள் கொடுத்தால் அனைவருக்கும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காமல் விட்டுவிடு அது என்ன தகுதி பார்ப்பது ஸ்டாலின் அவர்களே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு என்ன குறை வைத்தார்கள். இலவச அரிசி தரவில்லையா தாலிக்கு தங்கம் தரவில்லையா இலவச மிக்ஸி கிரைண்டர் தரவில்லையா இலவச ஸ்கூட்டி தரவில்லையா மடிக்கணினி தரவில்லையா ஆடு மாடு தரவில்லையா அம்மா உணவகம் கூட கொடுத்தார்கள். அப்படிப்பட்ட புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மாவை இழந்து நாம் தவிக்கிறோம். இந்த நேரத்தில் 520 வாக்குகளை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது பள்ளி குழந்தைகளை கல்லூரி செல்லும் மாணவ மாணவர்களையும் எப்படி காப்பாற்றுவது. ஆங்காங்கே கல்லூரி மாணவிகளும் மது அருந்துகிறார்கள். அங்கே டாஸ்மாக் சென்றால் 20 கிழவிகள் படுத்திருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கி விட்டார்கள் திமுகவினர். புரட்சித்தலைவி அம்மாவின் காலத்தில் இரண்டு மணி நேரம் குடித்து கொள்ளலாம் என்று இருந்தது. இப்பொழுது பார்த்தால் ராத்திரி பகல் என்று 24 மணி நேரமும் மது கிடைக்கும் அளவிற்கு இருக்கிறது. ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் குவாட்டர் இருக்கிறது ஒவ்வொருவரிடமும் கஞ்சா இருக்கிறது. தமிழக மக்களை போதைகளாக்கி அவர்களை அப்படியே மயக்கத்தில் வைத்திருந்தால் நம்முடைய குடும்பம் நன்றாக வளரும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உதயநிதியை முதல்வராகி விட்டு நாம் டெல்லி சென்று பிரதமர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். ஸ்டாலின் அவர்களே முதலில் தமிழ்நாட்டை காப்பாற்ற பாருங்கள். கருணாநிதி அவருக்கு பின்னால் ஸ்டாலின் அவருக்கு பின்னால் உதயநிதி அவருக்கு பின்னால் இன்பநதி இப்படியே சென்றால் 234 தொகுதிகளிலும் அவர்கள் குடும்பத்தையே நிக்க வைப்பார்கள். அவர்கள் அனைவரையும் எம்எல்ஏ ஆக்கிவிட்டு நம்ம உதயநிதியை முதலமைச்சர் ஆக்கிவிட்டு இவர் வடக்கே சென்று அவர்களை ஏமாற்றிவிட்டு பிரதமர் ஆகி விடுவாராம். நான் அதிகம் பேச விரும்பவில்லை நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். கடந்த முறை 38 எம்பிக்களை அனுப்பி வைத்தார்கள் அவர்கள் அங்கே சென்று டேபிளில் உட்கார்ந்து ஆறு லட்சம் ரூபாய்க்கு வடை சாப்பிட்டு இருக்கிறார்கள். 7 லட்சம் ரூபாய்க்கு டீ குடித்து இருக்கிறார்கள் அங்கே தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது வேட்பாளர் அப்படி அல்ல நம்ம தமிழ்மணி அவர்கள் அங்கே சென்று என் தொகுதி என்னவாயிற்று என்று கேட்கப் போகிறார். நம்முடைய தொகுதியின் குறைகளை அங்கே மற்ற எம்பிக்களுடன் சேர்ந்து கேட்கப் போகிறார். தமிழ் நாடு அமைதி பூங்காவாக இருப்பதற்கு எடப்பாடி யார் அவர்கள் தலைமையில் அதிமுகவிற்கு இருக்கின்ற கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியும் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று ஆனால் ஞாபகம் படுத்துகிறோம். ஏனென்றால் திமுக காரன் நாக்கில் தேனை தடவிக் கொண்டு நாளை வந்து தங்கத்தில் திருவோடு தர போகிறோம் என்று கூறுவார்கள் நீங்கள் மயங்கி ஓட்டு போட செல்வீர்கள். அப்புறம் அதை பார்த்தால் ஒன்றும் இருக்காது. எனவே அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே இரட்டை இலைக்கு வாக்களித்து நமது வெற்றி வேட்பாளர் தமிழ்மணி அவர்களே வெற்றி பெறச் செய்து அவரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று சிறப்பாக பேசினார்.