அருப்புக்கோட்டை பள்ளியில் நடிகர் தாமு உணர்ச்சிமிகு பேச்சு
அருப்புக்கோட்டை தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் தாமு உணர்ச்சிமிகு பேசினார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 21 வது ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளின் கொஞ்சல் நடனங்களும், தீப்பொறிப் பறக்க நெருப்பு பற்ற வைத்த கம்பில் மாணவர்கள் சிலம்பம் சுற்றியதும், குடத்தின் மேல் நின்று மாணவர்கள் யோகாசனம் செய்ததும் அதைவிட ஒரு படி மேலாக கயிற்றில் தொங்கியபடி யோகாசனம் செய்ததும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
உற்சாகமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் நகைச்சுவை நடிகர் பேச்சாளர் தாமு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது பல்வேறு வகையான மிமிக்ரி செய்து அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார். தொடர்ந்து பேசிய தாமு, பெற்றோர்கள் ஸ்மோக்கிங், டிரிங்கிங் இந்த இரண்டு திங்கையும் விட வேண்டும், குழந்தகளை வளர்க்க பெற்றோர்களின் ஆரோக்கியம் முக்கியம், குழந்தைகளின் மு.ன் பெற்றொர்கள் சண்டை போடாதீர்கள், எனக்கு திருமணம் முடிந்து 13 ஆண்டுகளுக்குப் பின் தவமாய் தவமிருந்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
லேட் அப்பாவானாலும் லேட்டஸ்ட் அப்பாவாக மாறினேன். நான் படிக்கும்போது மிக மட்டமான மோசமான மாணவனாக இருந்தேன். பள்ளி மாணவன் மூன்றாவது படிக்கும் போது பள்ளிஅறையில் அமர்ந்து பின்னால் இருந்து பல்வேறு ஓசைகளை எழுப்புவேன். டீச்சரின் ஜடையை பிடித்து இழுத்து விடுவேன்.
பின்னாலிருந்து நாய் போல மாடு போல கத்துவேன் மூன்றாம் வகுப்பில் ஆல்பாஸாகி நான்காம் வகுப்பு சென்றேன் அங்கு பென்சில் திருடுபவன் பேனா தேடுபவனுக்கு லீடராக இருந்தேன். அதிலும் ஒருவன் என்னை காட்டி குடுத்துட்டான். சந்தன கடத்தல் வீரப்பன் போல் இருப்பார் என் தலைமை ஆசிரியர். அப்போது நல்லவன் போல் நடித்தது தான் நடிப்பின் ஆரம்பம். அப்போது என் ஆசிரியர் ராதாபாய் என்னை தண்டிக்க வில்லை அந்த டீச்சர் எனக்காக குடியரசு தின விழாவில் வாய்ப்பை பெற்று தந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் கைதட்டினார்கள். அம்மாவை விட ஆசிரியர்களுக்கு சக்தி அதிகம். அடுத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிடதீர்கள். அதே போல குழந்தைகள் அப்பா அம்மாவை தொல்லை செய்யக்கூடாது. உங்களை அடித்து விட்டு உங்கள் அம்மா அழுவார்கள். தொட்டில் பழக்கம் தான் இறுதி வரை வரும்.
குழந்தைகள் சாப்பிட செல்போன் குடுத்தால் அதுதான் இறுதிவரை வரும். அம்மா சுமந்தது கருவரை ஆசிரியர் சுமந்தது வகுப்பறை. பீரோ மீது எலுமிச்சை பழம் வைக்காலம் ஆனால் எலுமிச்சை பழம் மீது பீரோவை வைக்காலாமா முட்டி என்ன ஆகும் பெற்றோர்கள் குண்டு குண்டாக உள்ளார்கள். குழந்தைகளிடம் யோகா கற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு நல்ல காய்கறிகளை கொடுங்கள். அப்போது தாமு செய்த டிரெயின் மிமிக்கிரி அனைவரையும் ஆச்சரியபட வைத்தது. தொடர்ந்து பேசிய அவர் அம்மாதான் மன்னிக்கும் பக்குவத்தை எனக்கு கத்து கொடுத்தார் அம்மா என்னை ஊக்குவித்தார். உங்கள் குழந்தைகளுக்குள் பல்லாயிரக்கான டீச்சர் உள்ளன.
தேர்வு சமத்தில் நீங்கள் சீரீயல் விரதம் இருங்கள், குழந்தைகள் மொபைல் விரதம் இருக்க வேண்டும், குழந்தைகளை காலையில் விரைவாக எழுந்திருக்க சொல்லுங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தே திரையில் தோன்றினாலும் உங்கள் குழந்தைகள் தான் சூப்பர் ஸ்டார் என ஊக்கப்படுத்தும் வகையில் உற்சாகமாக பேசினார். மேலும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மேடைக்கு அழைத்து ஊக்கப்படுத்தினார்.
நகைச்சுவை நடிகர் தாமுவின் பேச்சை அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் கைத்தட்டி உற்சாகமாக ரசித்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.