மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை பிரச்சாரம்

I.N.D.I.A கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி திண்டுக்கல் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-04 08:58 GMT

பிரச்சாரம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தெருத்தெருவாக வீடு வீடாக நடந்து சென்று நடிகை ரோகிணி சச்சிதானந்தத்தை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் செலுத்த சொல்லி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இதில் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News