நீலகிரியில் நடிகை நமீதா பிரச்சாரம்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான நமீதா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.என்.பாளையம் பகுதியில் திறந்த வழி வேனில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது அவர் கூறியதாவது; கடந்த 10 வருடங்களில் நமது பாரத பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நமக்கு செய்துள்ளார். கொரோனா காலங்களில் உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக இலவச தடுப்பூசி நாடு முழுவதும் வழங்கி நமது உயிரை பாதுகாத்தார். பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி நமது தமிழக மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்த பிரதமருக்கு நன்றி கடனாக தாமரை சின்னத்தில் நாம் ஓட்டு போட வேண்டும் என்று நமீதா பேசினார்.