தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை - ஜோதிமணி எம்.பி ஆய்வு
தனது எம்.பி நிதியில் கட்டப்பட்ட பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஜோதிமணி எம்.பி ஆய்வு செய்தார்;
Update: 2023-10-27 00:36 GMT
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள அரபிக் பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021- 22 இன் படி ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.