விளைபொருள்களை மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம் - பழநிமாணிக்கம்

விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பழநிமாணிக்கம் தெரிவித்தார்.

Update: 2024-01-24 11:07 GMT
எம்.பி.பேசுகிறார்

தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற வாழை மற்றும் தென்னை பயிர்களின் மதிப்பு கூட்டல் சார்ந்த வேளாண் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கத்தில் எம்.பி பழநிமாணிக்கம் பேசியது: தென்னையில் நீரா, தேங்காய் எண்ணெய் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க வேண்டும். கேரளத்தில் 10 ஊர்கள் சேர்ந்து கூட்டுறவு சங்கம் தொடங்கி, தேங்காய் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.  நம்முடைய எல்லா விளைபொருள்களுக்கும் சந்தையில் தேவை அதிகமாக இருக்கிறது. விளைப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட, மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். என்றார்.

இக்கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன்,  டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, வேளாண் துறை இணை இயக்குநர் ந.க. நல்லமுத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நிறுவன இயக்குநர் வெ.பழனிமுத்து வரவேற்றார். நிறைவாக, தோட்டக்கலைத் துறைத் துணை இயக்குநர் அ.வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News