ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவுகள் இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

Update: 2024-04-02 15:33 GMT
வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக கூடுதல் வாக்குப்பதிவுகள் இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத்திற்காண தேர்தல் வாக்குப்பதிவு தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு வாபஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்று இறுதி வேட்பாளர் உறுதி செய்யப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 11 வேட்பாளர்களும் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே காஞ்சிபுரம் வாக்கு பதிவு இயந்திர கிடங்கில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்ற பார்வைக்கான இயந்திரம் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 11 வேட்பாளர்களை உள்ளதால் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் போதுமானதாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக காஞ்சிபுரத்திலிருந்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதலாக 481 வாக்கு பதிவு இயந்திரங்களும்,

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பி வைக்கும் படி இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இதற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த சீலிட்ட அறையிணை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , அதிமுக திமுக தேமுதிக மற்றும் சிபிஐஎம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News