சேலம் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
சேலம் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 09:52 GMT
சேலம் தளவாய்ப்பட்டி அருகே உள்ள திருப்பதி கவுண்டனூர் பகுதியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் இல்லை. இலவச பஸ் பயண சலுகை அளிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படும்.
எனவே தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயில அரசு இசைப்பள்ளியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.