சர்ச்சைக்குரிய சாமியார் காலில் விழுந்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்

சீர்காழியில் தருமபுர ஆதீனத்திடம் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபு ஆதினத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

Update: 2024-03-23 17:35 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் மகன் இன்ஜினியரிங் பட்டதாரி பாபு, தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானத்திடம் சீர்காழி கட்டளை மடத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். தருமபுர ஆதீனத்தின் மடத்தின் சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு சாமி படங்கள் பிரசாதங்களை தருமபுர ஆதீனம் வழங்கினார். இந்நிகழ்சாசியில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஆதீனத்தின் ஆபாச வீடியோவை காண்பித்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற மிரட்டல் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் மிரட்டியர்களை கைது செய்தும், ஆபாச வீடியோ ஆய்வுக்கு அனுப்பியுள்ள நிலையில்,ஆதீனத்திடம் ஆசி பெற்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News