அதிமுக வேட்பாளரை விரட்டி அடித்த அதிமுகவினர்

திருக்கழுக்குன்றம் அருகே முள்ளி கொளத்தூர் வேட்பாளர் வருகைக்காக சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் ,வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் வரக்கூடாது என விரட்டி அடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-05 04:41 GMT

அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 

செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் உள்ள முள்ளி கொளத்தூர் ஊராட்சியில் காலை 10: 00 மணிக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிக்க வருவதால் முள்ளி குளத்தூர் மற்றும் ஈகை கிராமத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என அதிமுக வினர் காலை 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் செல்லும் சாலை முள்ளி குளத்தூர் முருகன் கோயில் அருகே கடும் வெயிலில் காத்திருந்தனர்.

வேட்பாளர் வராததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் எங்கள் கிராமத்திற்குள் வந்தால் விரட்டி அடிப்போம் என கூச்சலிட்டனர்..கடும் வெயிலில் காத்திருந்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பெண்கள் அனைவரும் கூச்சலிட்டபடி வேனில் ஏறி புறப்பட்டனர். மீண்டும் 6 மணி நேரம் கழித்து அந்த கிராமத்திற்கு சென்ற வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை அதிமுகவினர் ஊருக்குள் வரக்கூடாது என விரட்டி அடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News