லால்குடியில் தோற்றதால் திருச்சியில் அமைச்சர் நேரு போட்டி - பரஞ்சோதி
2001 தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற அமைச்சர் கே.என்.நேரு லால்குடி பக்கமே வராமல் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என தேர்தல் பரப்புரையில் முன்னால் அமைச்சர் பரஞ்சோதி பேசினார்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக எஸ்டிபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் போட்டியிட்டு தேர்தல் பரப்பரை செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி பேசியதாவது கடந்த 2001 தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற நேரு லால்குடி பக்கமே வராமல் இன்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.நீங்கள் எங்களுக்கு வேனாம் என்று அவர் போனார். நீங்கள் அவர் வேண்டாமென்று எங்களுக்கு தீர்ப்பளிக்க வேண்டும். அதுதான் இந்த தேர்தல். திமுக நிர்வாகிகள் கூட ஏன் இன்னும் அவருக்கும், அவரது தம்பிக்கும், மகனுக்கும் மற்றும் அவரது குடும்பத்திற்க்கும் அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.எனவே அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் வெற்றி உறுதியாகிவிட்டது.ஆகவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பொதுமக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து எசனைகோரை, தண்டாங்கோரை, டி.வளவனூர் பச்சாம்பேட்டை,திருமணமேடு, பெரியவர்சீலி,இடையாற்றுமங்கலம், பம்பரம் சுத்தி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.