அதிமுக வேட்பாளர் காரிலிருந்த அதிமுக கொடி அகற்றம்

அதிமுக வேட்பாளர் காரிலிருந்து அதிமுக கட்சி கொடியை அதிமுகவினர் அகற்றினர்.

Update: 2024-03-24 14:04 GMT

அதிமுக கொடி அகற்றம்

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது காரில் கட்சி கொடி கட்டி தேர்தல் பணிமனை கால்கோள் விழாவிற்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வேட்பாளர் காரில் கொடி கட்ட அனுமதி கடிதம் காட்ட சொல்லினார். ஆனால் கொடி கட்ட எவ்வித அனுமதி பெறததால் காரிலிருந்த கட்சி கொடியை அகற்ற உத்தரவிட்டதையடுத்து காரிலிருந்து அதிமுக கட்சி கொடியை அதிமுகவினர் அகற்றினர்.
Tags:    

Similar News