மேட்டூர் அருகே அதிமுக துவக்க விழா பொதுக்கூட்டம்

மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக 52 -வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-19 04:31 GMT

அதிமுக துவக்க விழா பொதுக்கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக 52 -வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் அருகே மேச்சேரி பேருந்து நிலையத்தில் அதிமுக,வின் 52 வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பேசிய ஆர்.இளங்கோவன்  கழக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த போது மேச்சேரியில் இருந்து ஓமலூர் வரை 100 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. சேலத்தில் 1000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா கொண்டு வரப்பட்டது. இது போல் பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தார். மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என தெரிவித்தார் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பல மடங்கு  மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல் ஏழை பெண்கள் வங்கியில் அடமானம் வைத்த 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனை நம்பி வங்கியில் நகை அடமானம் வைத்த 30 லட்சம் பெண்கள் ஏமாற்றப்பட்டனர் என குற்றச்சாட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் 52 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கபட்டது.  இந்த பொதுகூட்டத்தில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி (அதிமுக), மாவட்ட மகளிர் அணி தலைவர் லலிதா சரவணன், ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூர் செயலாளர் குமார் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 2000- கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News