அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றம்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் தொடர்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவனஈட்டுத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டும் இன்றி கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து சட்டப்பேரவையில் முழக்கம் எழுப்பினர்.
இதன் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை சட்டப்பேரவை தலைவர் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே கடந்த மூன்று நாட்களாக அவையில் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளியேறினர். இந்த நிலையில் நேற்று மொத்தமாக நான்காவது தினமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து பேரவை தொடங்கிய உடனே கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் முன்னதாக கொடுத்திருந்த அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு விதி 56 அடிப்படையில் அவை நிகழ்வுகளை ஒத்திவைத்து கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான மனு அளித்தும் சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்க வில்லை என்று கூச்சலிட்டு பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டார்.