அதிமுக பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-27 05:16 GMT

 திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 76வது பிறந்த தின பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. 

அதிமுக நகர செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான அங்கமுத்து தலைமை தாங்கினார், அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். டி. சந்திரசேகர், எம் சி மோகன்,அணிமுர் மோகன், சக்திவேல், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கழகப் பொதுக்குழு உறுப்பினருமான  பொன் சரஸ்வதி கலந்து கொண்டார், சிறப்பு பேச்சாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், தஞ்சை ராஜசேகர் ஆகியோர் அதிமுக கழக முன்னாள் பொதுச் செயலாளருமான  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News