தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த வாலிபர் - பொதுமக்கள் பாராட்டு
சாத்தான்குளம் அருகே சாலையில் தவறவிட்ட ஆவணங்களை வாட்ஸ்அப் குழு மூலம் உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தொழிலாளி. இவர் நேற்று கொம்மடிக்கோட்டை தனியார் கல்லூரி அருகே சென்றபோது மணிபர்ைச தவறவிட்டுள்ளார். அதில் ரூ.1,700 பணம், ஆதார் கார்டு, வங்கி ஏ.டி.எம். கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்துள்ளது. நேற்று இரவு அந்த வழியாக சென்ற உவரியை சேர்ந்த லெட்சுமணன் மகன் சுப்பையா சுரேஷ் (35) என்பவர் இந்த மணிபர்சை எடுத்துள்ளார்.
அதை பரிசோதித்து பார்த்த அவர், அதில் இருந்த ஆவணங்களை ேபாட்டோ எடுத்து, தனது வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டு இருந்தார். அந்தக் குழுவில் இருந்த சக உறுப்பினர்கள் மூலம் அறிந்த புருஷோத்தமன், உடனடியாக சுரேஷை தொடர்பு கொண்டார். அவரும், சுரேஷிடம் பணம் உள்ளிட் அனைத்து ஆவணங்களயும் ஒப்படைத்தார். அவருக்கு புருஷோத்தமன் நன்றி தெரிவித்தார். மேலும், சுரேஷின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.