ராசிபுரம் தூய லூர்த்து அன்னை பேராலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு ராசிபுரம் தூய லூர்த்து அன்னை பேராலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவா்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் சிறப்பு பிராா்த்தனை ஆலயத்தை சுற்றி சிலுவை பாதையில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் நின்று சிறப்பு பிராா்த்தனை செய்து வழிபட்டனா்.
கிறிஸ்தவ ஓசானா பாடல்களையும் பாடி ஆலயத்தை சுற்றி வந்தனர் . இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் 14 நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பங்குத்தந்தையர்கள் அருட்கன்னியர்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் சிலுவையை சுமந்து சென்றனர்.
தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.