நாகர்கோவிலில் குரூப் I  தேர்வு  தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் 

நாகர்கோவிலில் குரூப் I  தேர்வு  தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 11:41 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  தலைமையில்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி I  (குரூப் 1) தேர்வு முன்னெற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.       

இக்கூட்டத்தில்  அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கலெக்டர்  தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி I தேர்வு 13.07.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 4,960 விண்ணப்பதார்கள் தேர்வு எழுத உள்ளனர். தொகுதி I தேர்வு தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், 

தேர்வை எதிர் கொள்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.              

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதாண்டாயுதபாணி,  அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஏ.வி.மூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News