செயின் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்; கட்டி வைத்து அடித்த பொது மக்கள்!!
சென்னை ஆவடியில் பெண்ணின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற சிறப்பு காவல் படை காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-06 12:10 GMT
நகை பறிப்பு
சென்னை ஆவடியில் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றதாகக் கூறி சிறப்பு காவல் படை காவலர் ஒருவரை பொது மக்கள் விரட்டி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலரான பொக்கர் என்பது தெரிய வந்ததாகவும், 15 நாட்கள் விடுப்பில் சென்னை வந்த போது செயின் பறிப்பில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.