ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மேலும் 3 பேர் கைது!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Desk
Update: 2024-07-07 02:50 GMT
armstrong murder case
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கோகுல், விஜய், சிவசக்தி என்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.