ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகை பயணி மீது விழுந்து விபத்து

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகை பயணி மீது விழுந்ததில், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2024-06-11 09:46 GMT

பயணி தலை மீது விழுந்த பாதாகை

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் சேலம் சென்னை கோவை திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஆத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் என 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் மேல் பகுதியில் தனியார் விளம்பர நிறுவனம் மூலம் நகை கடை, வணிக நிறுவனங்களில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை ஒன்று திடீரென முறிந்து பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த பயணி மீது விழுந்தது. இதில் பயணி லேசான காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர்த்தப்பினார். தரமற்ற இரும்பு குழாய்கள் அமைத்து இருப்பதால் இந்த விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. 

இதுபோன்று பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News