திருப்பூர் மாநகராட்சியில் வரிவசூலை தீவிரபடுத்த ஆலோசனை

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 2-வது மண்டல மாநகராட்சி அலுவலக அதிகாரிகளுன் வரி வசூலை தீவிரபடுத்த ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2024-02-15 10:03 GMT

ஆணையர் உத்தரவு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல் அலுவலகத்தில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களுக்கான தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட வரிகளை நடப்பாண்டு (2023-2024)கான வரி வசூலை 100% தீவிரப்படுத்தும் விதமாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடப்பாண்டு வரி வசூலை தீவிர படுத்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

உடன் உதவி ஆணையாளர் மண்டலம் (1&2) முருகேசன், சுகாதார அலுவலர் பிச்சை மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News