தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் !
சேலம் மாவட்டம், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-20 06:18 GMT
மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மேட்டூர் வட்டாட்சியர் விஜி தலைமையில் நடைபெற்ற அறிவுரை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அச்சகம், ஹோட்டல், அடகு கடை, தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரசுரம் செய்யும்போது கண்டிப்பாக அச்சக முகவரி, சுவரொட்டி, துண்டு பிரசுரத்தின் முன்பக்கத்தில் படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும், அச்சடித்து முடித்த பின்னர் எடுக்கப்படும் நகல் குறித்த தகவலையும் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிய வேண்டும், திருமண மண்டபகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் கூட்டம் விருந்து நடத்த அனுமதிக்க கூடாது, தங்கும் விடுதிகளில் அளவுக்கு அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களை தங்க வைப்பதை தவிர்க்க வேண்டும், நகை அடகு கடையில் அளவுக்கு அதிகமான தங்க நகைகளை அடகு வைக்க வருபவர்கள் குறித்த தகவல், தங்க நகைகளை அடகு வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை சார் ஆட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.