பணி புறக்கணிப்பு முடிந்து பணிக்கு திரும்பிய வக்கீல்கள்

குமாரபாளையத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பிற்கு பிறகு நேற்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

Update: 2024-04-29 16:17 GMT

குமாரபாளையத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பிற்கு பிறகு நேற்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பினர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வக்கீல்கள் , பெண் வக்கீல்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை. பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வக்கீல்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டு வந்தனர். நீதிமன்ற வளாகம் முன்பு தலைவர் சரவணராஜன் தலைமையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகள் வலியுறித்தியும், மாவட்ட நீதிபதிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்திற்கு பின், இவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தலைவர் சரவணராஜன் கூறியதாவது: எங்கள் கோரிக்கை வலியுறித்தி ஏப். 15 முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தோம். இதையடுத்து நீதிமன்ற வளாகம் முன்பு எங்கள் கோரிக்கையை வலியுறித்தி மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதையடுத்து, கோரிக்கை நிறைவேற்ற ஒப்புதல் தரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இன்று (ஏப். 29) முதல் மீண்டும் நீதிமன்ற பணிக்கு வக்கீல்கள் திரும்பினோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக உத்திரவு கடிதம் கிடைக்கப்பெற்றதும், ஆடை மற்றும் அறை, உணவு உண்ணும் அறை, தனித்தனி கழிப்பிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News