முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் !
அரசு பள்ளியில் 35 ஆண்டுகளுக்குப்பின், தாங்கள் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 06:57 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1989ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ- - மாணவியர், தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் அலுவலர்களாகவும், உயர் அதிகாரிகளாவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இம்மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப்பின், தாங்கள் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி, தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கவுரவிக்க முடிவு செய்தனர். அதன்படி, 'மரம் திரும்பிய பறவைகள் 1989ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியை, நேற்று பள்ளி வளாகத்தில் நடத்தினர். இதில், 60க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தங்களுக்கு பாடம் நடத்திய, 25 ஆசிரியர்களை வரவழைத்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர். பள்ளியில் படிக்கும்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை மலரும் நினைவுகளாக நினைவு கூர்ந்தனர். பள்ளிப்படிப்பிற்குப் பின், தாங்கள் கடந்த வந்த பாதை, பணி விபரம், குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒலிபெருக்கி மற்றும் மின்சார மணி அடிக்கும் கருவியை வழங்கினர்."