நீண்ட காலத்திற்கு பின் சீரமைக்க்கப்பட்ட சாலை 3 நாளில் துண்டிப்பு

பணியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-22 07:07 GMT
புதிய சாலையை உடைத்து பணி நடைபெறுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை  -  ஆலஞ்சோலை சாலை பல ஆண்டுகளாக மிக மோசமான பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டன. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையை சீரமைப்பு பணி  கடந்த வாரம் தொடங்கி, குழித்துறை சந்திப்பு முதல் கழுவன்திட்டை சந்திப்பு வரையிலான சாலை செப்பனிடும் பணி கடந்த நான்கு தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் கழுவந்திட்டை  சந்திப்பு மற்றும் குழித்துறை கோர்ட் அருகில் உள்ள இரு இடங்களிலும் பைப் லைன் உடைந்து தண்ணீர் ரோட்டில் வெளியேறிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில்  உடைந்த பகுதிகளை சீரமைப்பதற்காக தொழிலாளர்கள் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டனர். பணி முடிந்த  மூன்று நாட்களில் சாலையை தொழிலாளர்கள் உடைத்து பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். செப்பனிடப்பட்ட இந்த சாலையை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும், பணியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News