அகத்தியர் அருவியில் இன்று முதல் அனுமதி
கனமழையால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மழை குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளானர்;
Update: 2023-12-27 06:25 GMT
அகத்தியர் அருவியில் இன்று முதல் அனுமதி
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக அகத்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் அகத்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 27/12/23 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.