கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-17 14:38 GMT

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அருகே கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கிராமப் புற மக்களிடம் வேளாண் திட்ட வரைபடம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூரில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பயிற்சியில் மாணவிகள் தீபா தா்ஷினி, திவ்யா, நந்தினி, பிரியதா்ஷினி, ராஜஸ்ரீ, ரோஜா, ஷஜ்மீரா, சுஜிதா ஆகியோா் கலந்துகொண்டு கீழப்பாவூா் பகுதியில் வேளாண் திட்டத்தில் சமூக வரைபடம்,

ஆதார வரைபடம், இயக்க வரைபடம், பயிா் அட்டவணை, வெண் வரைபடம், தினசரி அட்டவணை, கால அட்டவணை, சிக்கல் மரம் ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கல்லூரி முதல்வா் தேரடி மணி தலைமையில் பேராசிரியா்கள் காளிராஜன், ராஜேந்திரன், பிரேமலட்சுமி ஆகியோா் மாணவிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தினா்.

Tags:    

Similar News