வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயணம்!

புதுக்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.

Update: 2024-05-24 08:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராம வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆதனக்கோட்டை கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆதனக்கோட்டையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒரு கண்காட்சியை நடத்தினர். இதில் வாளி பொறி , கிசான் கிரடிட் கார்ட் , பாரம்பரிய விதைகள் , ஒளி பொறி , இலை வண்ண அட்டை , மஞ்சள் மற்றும் நீல ஒட்டும் அட்டை, சிறு தாணியத்தின் பயன்கள் முதலியவற்றை குறித்த செயல் விளக்கத்தை செய்துகாண்பித்தனர். இதில் J.ஜெமிலா ரோஸ்லின் ,M. கமலி பிரியா, N.கனிஷ்கா ஈஸ்வரி,V. காயத்ரி, R.கீர்த்தனா,V. கீர்த்தி, D.லாவண்யா,S. லாவண்யா,K.மானசா,S. மனசா, V.மஞ்சுளா ஆகியோர் கொண்ட குழு மாணவிகள் செயல் விளக்கம் மூலம் விளக்கினர்.
Tags:    

Similar News