விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-12-22 07:54 GMT

ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் பழனி, துணைச் செயலாளர்கள் ஆனந்தராஜ், உத்திரகுமார், துணைத் தலைவர் வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜெயமூர்த்தி, செல்வமணி கண்டன உரையாற்றினர். மாவட்ட தலைவர் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும். குடும்பத்திற்கு 200 நாள் வேலை கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 60 வயது முடிவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
Tags:    

Similar News