நாமக்கல்லில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். தமிழகத்தில் பயனற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1996-2001ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி பாக்கியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
விவசாய தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 50 ஆயிரம், விபத்தில் இறந்தால் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் குடும்பங்களில் கல்வி, திருமணம், பிரசவம் போன்றவற்றிற்கு சமூக பாதுகாப்பு உதவிகள் வழங்கிட வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
சிபிஐ நாமக்கல் மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சிவகுமார், ஏஐடியுசி நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், செயலாளர் ராமகிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் குமார், வி.தொ.சங்க நிர்வாகிகள் மணிகண்டன், பாண்டியன், பூமாலை, சண்முகசுந்தரம், சந்திரன், பழனிவேலு , குப்பன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்