வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேளாண் அமைச்சர்
தர்மபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.
Update: 2024-06-05 03:02 GMT
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆ. மணியை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்த அவர், வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்த அமைச்சர் இந்த வெற்றி என்பது முதலமைச்சர் அவர்கள் செய்த சாதனைக்காக கிடைத்த வெற்றி.. தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 ம் மக்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான கல்வி திட்டங்கள் உள்ளிட்ட முதலமைச்சரின் மூன்றாண்டு சாதனைக்கு மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் மகத்தான அங்கிகாரம் அளித்திருக்கிறார்கள் என்றார்.