பட்டுக்கோட்டை அருகே ஊரகப் பங்கேற்பு திறனாய்வில் வேளாண் மாணவிகள்
பட்டுக்கோட்டை அருகே வேளாண் மாணவிகள் ஊரகத் திறனாய்வில் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 15:02 GMT
பட்டுக்கோட்டை அருகே வேளாண் மாணவிகள் ஊரகத் திறனாய்வில் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதியாக பட்டுக்கோட்டை அருகே செண்டாங்காடு கிராமத்தில், ஊரகப் பங்கேற்பு திறனாய்வினை அம்மாணவிகள் நடத்தினர். இந்நிகழ்வில், அக்கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், கிராம எல்லை வரைபடம், சமூக வள வரைபடம் ஆகியவற்றை உருவாக்கியும், அக்கிராமத்தின் முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு எனும் வரைபடத்தில் குறிப்பிட்டும், அத்துடன் இணைந்து அக்கிராம மக்களின் தினசரி கால அட்டவணை, கல்வியறிவு விகிதம், இயக்க வரைபடம் முதலியவற்றையும் உருவாக்கி அவர்களுக்கு தெளிவாக விளக்கினர். அதுமட்டுமின்றி, பயிர் பிரமிடு, நோய் மரம், தீர்வு மரம், பருவகால அட்டவணை போன்றவை பற்றியும் கிராம மக்களுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் அவ்வூர் பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றதுடன், வேளாண் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினர்.