திருச்சி: மாணவர்கள் சொல்வதை கேளுங்க
துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகேயுள்ள சோபணபுரம் கிராமத்தில் மக்காச்சோளம் வயல் வெளியில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உயிர் பூச்சிக்கொல்லி Metarhizium anisopliae) குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 15:17 GMT
வேளாண் கல்லூரி மாணவர்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக உப்பிலியபுரம் அருகே சோபணபுரம் கிராமத்தில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ்,கோகுல்பிரகாசம்,கௌதமன்,குணாளன்,இஷாக்,ஜெயராகவன்,ஜெயந்த் ராஜன், மற்றும் கார்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மையில் உயிர் பூச்சிக்கொல்லி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.