அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2023-12-05 02:59 GMT
அதிமுக ஆலோசனை கூட்டம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்து வருகின்றனர். தேர்தல் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் பழனிச்சாமி உத்தரவுபடி, கரூர் சட்டமன்ற தொகுதி, தாந்தோணி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் ஆர் விஜயபாஸ்கர், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலாேசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், தாந்தோணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.