அதிமுக பிரச்சாரத்தில் செய்தியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு !

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் செய்தியாளருக்கு இருக்கைகள் வழங்காத அதிமுக நிர்வாகத்தினரை கண்டித்து செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து கண்டனம் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-04-01 07:19 GMT

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேடைக்கு முன்பு செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க இடத்தை மட்டும் ஒதுக்கிய அதிமுக நிர்வாகிகள் இருக்கைகள் வழங்காதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் செய்தி சேகரிக்க நின்ற நிலையில் இருக்கைகள் வழங்க கேட்டும் அதிமுக நிர்வாகிகள் கண்டு கொள்ளாததால் செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து பெயரளவிற்கு மட்டும் 5 பேர் அமருவதற்கு இருக்கைகள் வழங்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் நிகழ்ச்சியில் அதிமுகவினர் செய்தியாளர்களுக்கு , உரிய இருக்கைகள் வழங்காமல் நின்றபடி செய்தி சேகரிக்க வைத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News