வேலூரில் சைக்கிள் ரிக்ஷாவில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதி சைக்கிள் ரிக்ஷாவில் சென்று பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-08 15:07 GMT

சைக்கிள் ரிக் ஷாவில் கலந்து கொண்ட வாக்கு சேகரித்த வேட்பாளர்

வேலூரில் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகாயம், சாய்நாதபுரம், பலவன்சாத்துகுப்பம் ஆகிய பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாய்நாதபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் டாக்டர் பசுபதி கைச்கிள் ரிக்‌ஷாவை ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். பின்னர், திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சென்று திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News