அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
பட்டியல் இன பெண் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேலூரில் அதிமுகவினர் ஆர்பாட்டம் .;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 11:22 GMT
அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
பட்டியல் இன பெண் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேலூரில் அதிமுகவினர் ஆர்பாட்டம். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் அதிமுக பொருளாளர் மூர்த்தி நிர்வாகிகள் அண்ணாமலை நாகு உள்ளிட்ட திரளான அதிமுகவினர் பங்கேற்றனர் . இதில் பல்லாவரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி என்பவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அவர்களது இல்லத்தில் பணிபுரிந்து வந்த பட்டியல் இனத்தை சார்ந்த பெண்ணின் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டித்தும் வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியல் இனத்தை சார்ந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று தங்களது கண்டனங்களை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.