கரூரில் எம்ஜிஆர் உருவ படத்திற்கு அதிமுகவினர் மரியாதை

கரூரில் எம்ஜிஆர் உருவ படத்திற்கு அதிமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2023-12-24 15:12 GMT

மறைந்த மக்கள் தலைவருக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்த அதிமுகவினர். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவரும், மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த எம்ஜிஆர் அவர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று.

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் மறைந்த தலைவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே, அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் அமைத்திருந்த எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட அவை தலைவர் திரு வி கா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் வி சி கே பாலகிருஷ்ணன், கரூர் பகுதி கழக நகர செயலாளர் வி சி கே ஜெயராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார்,

கரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு மறைந்த மக்கள் தலைவர் எம்ஜிஆர்-க்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News