அதிமுக வெற்றி பெறுவது உறுதி - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.;

Update: 2024-04-15 08:15 GMT

ஆலோசனைக் கூட்டம் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட கழகசெயலாளர்கள், ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள அதிமுக தலைமை தேர்தல் காரியாலயத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மற்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி சண்முகநாதன் அதிமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் சிவசாமி வேலுமணி வெற்றி பெறுவதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.

Tags:    

Similar News