அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சங்ககிரி பகுதிகளில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

Update: 2023-12-24 17:01 GMT

சங்ககிரி பகுதிகளில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. சங்ககிரி வட்டம் தேவூர் அதிமுக மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுபோல் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை பகுதிகளில் அதிமுக நகரச் செயலாளர் காளியப்பன் தலைமையில் நிர்வாகிகள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் சேலம் புகர் துணை மாவட்ட செயலாளர் வேலுமணி , சங்ககிரி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் , தேவூர் நகர செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற தொகுதி செயலாளர் வி.ஆர். ராஜா, மற்றும் நிர்வாகிகள் முருகன், நீலமேகம், அரசிராமணி வார்டு உறுப்பினர்கள் செல்வி தங்கவேல், ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News